ஏர்வாடி காவல் ஆய்வாளர் தர்மராஜ் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 270 மாணவ, மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

ஏர்வாடி காவல் ஆய்வாளர் தர்மராஜ் ஏற்பாட்டில் தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 270 மாணவ, மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சரகம் காவல் உதவி கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் ஐபிஎஸ் ஆலோசனை பேரில், ஏர்வாடி காவல் ஆய்வாளர் மா. தர்மராஜ் ஏற்பாட்டில், தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, முத்தையாபுரம் வடக்கு தெருவில் அமைந்துள்ள கே.டி.கே. கோசல்ராம், உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 270 மாணவ, மாணவிகளுக்கு வெள்ள நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்தார். இதையடுத்து 10/01/2024 ஆம் தேதி பள்ளியின் தலைமை ஆசிரியர் பாஸ்கர் மான்சிங மூலம் மாணவ, மாணவிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கு பெரிதும் உறுதுணையாக இருந்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சத்திய சங்கர் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் மாணவ, மாணவிகள் பெற்றோர்களும் நன்றியினை தெரிவிக்கின்றனர்.

நிகழ்வில் உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஏர்வாடி காவல் ஆய்வாளர் தர்மராஜ் ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பள்ளியின் தாளாளர் ராஜா நன்றி தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )