
ஆறுமுகநேரி லைட் முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் உறவு அறக்கட்டளை சார்பில் லைட் முதியோர் இல்லத்தில் முதியோர்களுடன் சமத்துவ பொங்கல் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் குரு சந்திரன் கலந்து கொண்டார்
நிகழ்ச்சியில் குழந்தைகளின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பின்பு அனைவருக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது இதில் உறவு அறக்கட்டளை தலைவர் கோடீஸ்வரன், துணைத் தலைவர் வழக்கறிஞர் பிரகாஷ்,செயலாளர் அஜித் மேலும் உறவு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES மாவட்டம்