
குரூஸ்பர்னாந்து பிறந்தநாளை தூத்துக்குடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்
தூத்துக்குடி மாநகர தந்தை குரூஸ்பர்னாந்து 155வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தூத்துக்குடி புனித பீட்டர் கோவில் தெருவில் குரூஸ் பர்னாந்து நற்பணி மன்ற தலைவர் ஹெர்மன் கில்டு தலைமையில் நடந்தது. செயலாளர் சசிகுமார் முன்னிலை வகித்தார். இதில் பனிமய மாதா கோவில் பங்குதந்தை ஸ்டார்வின் பங்கேற்று 10 பேருக்கு தையல் இயந்திரம், 400 சில்வர் பாத்திரம், 5 கிலோ அரிசி 200, உள்ளிட்ட 610 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், தீபக்,வர்க்கீஸ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், ஜெனிஸ், லூர்துசாமி, கல்யாணசுந்தரம், அமலநாதன், சகாயராஜ், அலாய், மனோகரன், பிரவின், சுடலைமுத்து, இனிக்கோ, மற்றும் நற் பணி மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் நன்றி கூறினார்.
CATEGORIES மாவட்டம்