
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாகப் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாகப் (Para Legal Volunteers – PLV) பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு. சென்னை உத்தரவின்படி. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் வட்ட சட்டப்பணிகள் குழுவில் சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாக (Para Legal Volunteers – PLV) பணியாற்ற விரும்பும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்த விரிவான விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற. (https://districts.courts.gov.in/tn/thoothukudi) விண்ணப்பிக்க விரும்புவோர் மேற்கண்ட வலைதளத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து, 19/07/24 அன்று மாலை 05.00 மணிக்குள் நேரிலோ அல்லது தலைவர், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, மாவட்ட நீதிமன்ற வளாகம்,628 003 தூத்துக்குடி முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ அனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி வாய்ந்த 50 நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தன்னார்வ தொண்டர்களாகப் பணியமர்த்தப்படுவார்கள். எனவே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொண்டுள்ளம் கொண்ட நபர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டர்களாகப் பணியாற்ற அழைக்கப்படுகிறார்கள்.