
தூத்துக்குடியில் பிராய்லர் கடையின் பூட்டை உடைத்து திருட்டு – நடவடிக்கை எடுக்கக்கோரி வியாபாரிகள் சங்கம் கோரிக்கை
தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் மெயின் ரோட்டில் உள்ள சிவதர்ஷிகா பிராய்லர் கடையின் பூட்டை உடைத்து அங்கிருந்த பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடந்த 15 நாள்களுக்கு முன்பு இதே பகுதியில் பழக்கடை ஒன்றில் நடந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. வியாபாரிகள மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.
இப்பகுதியில் தொடரும் கொள்ளை சம்பவங்களை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்
CATEGORIES மாவட்டம்