
கட்டிட கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டி இடையூறு ஏற்படுத்தினால் அபராதம் மற்றும் நடவடிக்கை- தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை
இது குறித்து தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது,
தூத்துக்குடி மாநகர பகுதிகளில் அமைந்துள்ள கட்டிடங்களின் அபிவிருத்தி மற்றும் புதிதாக கட்டிடம் கட்டும்போது ஏற்படக்கூடிய சேகரமாகக் கூடிய கட்டிட கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிகளான ஆதிபராசக்தி நகர் பூங்கா திறவிடம் ரஹமத் நகர் ராம் நகர் பூங்கா திறவிடம் கதிர்வேல் நகர் பூங்கா பகுதிகள் அம்பேத்கார் நகர் திறவிடம் ஓம் சாந்தி நகர் மார்ட்டினா நகர் அய்யாசாமி காலனி திறவிடங்கள்,மடத்தூர் தாழ்வான பகுதிகள் பகுதிகள் தருவைகுளம் உரக்கடங்கு, தனசேகர் நகர் மேற்கு பகுதி மாநகராட்சி பாளை ரோடுஇடுகாடு வளாகம் ஆகிய பகுதிகளில் கட்டிடக்கழிவுகளை கொட்டுவதற்காக பொதுமக்களின் வசதிக்காக இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் கட்டிடக்கழிவுகள் ஆங்காங்கே குவியலாக குவிக்கப்பட்டு பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் பொது சுகாதாரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறான நிலையில் மாநகராட்சி அலுவலர்கள் கள ஆய்வின்போது நான்கு கட்டிடங்கள் கட்டுமான கழிவுகளை சாலையில் கொட்டி இடையூறு ஏற்படுத்திய செயல் கண்டறியப்பட்டு தலா 2000/- வீதம் நான்கு கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.8000/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, இனிவரும் காலங்களில் கட்டிடம் கட்டவோர் மாநகராட்சியால் அறிவிக்கப்பட்டுள்ள முறையான இடங்களில் கட்டுமான கழிவுகளை அப்புறப்படுத்தத் தெரிவிக்கப்படுகிறது. தவறான நிலையில் கட்டுமான விதி மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.