Breaking News

கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் மாருதி ஸ்விஃப்ட் கார் தவித்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளாக விற்பனையில் இருந்து வரும் ஸ்விஃப்ட் காரை தற்போது மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து மேம்படுத்தி உள்ளது.

swift-1

வெளிநாடுகளில் சோதனை செய்யப்பட்டு வரும் சுஸுகி ஸ்விஃப்ட் கார் இப்படித்தான் இருக்கும் என்ற அனுமானத்தில் கம்ப்யூட்டர் முறையில் வரையப்பட்ட படங்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. இந்த நிலையில், முதல்முறையாக புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் காரின் உண்மையான படம் ஒன்று ஃபேஸ்புக் மூலமாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த படத்தையும், கூடுதல தகவல்களையும் தொடர்ந்து காணலாம்.

swift-2

இதுவரை வெளியான ஸ்பை படங்கள் அங்க அடையாளங்கள் மறைக்கப்பட்டு இருந்தன. இந்த நிலையில், முக்காடு போடாமல் முதல்முறையாக தனது முகத்தை காட்டியிருக்கிறது புதிய ஸ்விஃப்ட் கார்

முன்பக்க க்ரில் அமைப்பு அறுகோண வடிவத்திற்கு மாறியிருப்பது குறிப்பிடத்தக்க மாற்றம். மேலும், ஹெட்லைட்டின் வடிவமைப்பில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. பம்பர் வடிவமைப்பும் மாறியிருக்கிறது.

swift-3
மேலும், புதிய மாருதி ஸ்விஃப்ட் கார் நீளத்திலும், அகலத்திலும் சற்றே அதிகரிக்கப்பட்டு அதிக இடவசதி கொண்ட காராக மேம்படுத்தப்பட்டு இருக்கும். உட்புற வடிவமைப்பிலும் அதிக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது.

ஸ்பை படங்கள் மூலமாக புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது தெரிகிறது. மேலும், ஸ்டீயரிங் வீலும் தட்டையான அடிப்பாகத்துடன் ஸ்போர்ட்ஸ் கார் போன்று கவர்வதாக இருக்கும்.

புதிய மாருதி ஸ்விஃப்ட் காரில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், நேவிகேஷன் வசதி, ரியர் வியூ கேமரா உள்ளிட்ட பல நவீன வசதிகள் இடம்பெற்று இருக்கும். அதேபோன்று, பாதுகாப்பு அம்சங்களிலும் பல படிகள் மேம்பட்டிருக்கும்.
swift-4

தற்போது பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய மாடலிலும் இடம்பெற்று இருக்கும். ஆனால், சுஸுகி நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் வெஹிக்கிள் எனப்படும் நவீன தொழில்நுட்ப வசதியுடன் வருகிறது.

வெளிநாடுகளில் சுஸுகி பிராண்டில் செல்லும் ஸ்விஃப்ட் கார் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக மட்டுமே வரும் என்பது அவதானிப்பு.
swift-6

அடுத்த ஆண்டு பிற்பாதியில் புதிய தலைமுறை மாருதி ஸ்விஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய மாடலைவிட சற்று கூடுதல் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.