
தூத்துக்குடி மாவட்டத்தில் வாகன தணிக்கையில் போக்குவரத்து போலீசார் படுமோசம் – குற்றஞ்சாட்டும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் சிறார்கள் அத்துமீறி வாகனங்களை தொடர்ந்து இயக்கி வருகின்றனர். இதில் அதிக திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை வைத்து கொண்டு அதிக ஒலி எழுப்பும் சைலன்ஸர் பொறுத்துக் கொண்டு தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் நோக்கில் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை மற்றும் பழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி என குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று, அதிகரித்து காணப்படுகிறது.
இதில் சிறார்கள் முதல் பெரியவர் வரை கஞ்சா மட்டும் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி சிறு, சிறு பிரச்சனைகளுக்கு கூட மோதல் ஏற்பட்டு கொடூரமாக கொலை செய்யும் செயலும் தொடர்ந்து ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.
இந்த குற்ற சம்பவங்கள் அதிகரிக்க காரணம் காவல்துறையினரின் வாகன சோதனை சரியாக செய்யாமல் அலட்சியமாக செயல்படுவதே இந்த குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க முக்கிய காரணம் என பொதுமக்கள் சமூக அலுவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
வாகனங்களில் செல்லும் நபர்களிடம் ஹெல்மெட் அணியவில்லை, அவரிடம் லைசன்ஸ் இல்லை என்பதற்காக வாகனங்களை முறையாக சோதனையிடாமல், அபராதம் விதிக்கப்படுவதால், அந்த வாகனத்தை ஓட்டி வரும் வாகனம் அவருக்கு சொந்தமானதுதானா.?. அல்லது திருடப்பட்டதா.? அந்த வாகனத்தில் ஏதேனும் போதை பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்தப்படுகிறதா.? என காவல்துறையினர் முறையாக சோதனையிடுவதில்லை எனவும், இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள் பெருகுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதாகவும் சரமாரியாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் இதுபோன்ற வாகன தணிக்கையின்போது முழுமையாக ஈடுபட்டு இருசக்கர வாகனம் முதல் நான்கு சக்கர வாகனம் வரை முறையாக சோதனையிட்டு அதன் பின்னர் அபராதம் விதிக்க வேண்டும். குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதியானால் அவர்கள் மீது காவல்துறையினர் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது வரை போக்குவரத்து காவல்துறையினர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சோதனை இடாமல் ஸ்கேன் செய்து அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு எந்த ஒரு பெரிய பாதிப்பும் இல்லை. மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூலமாகவும், அவரது அறிவுறுத்தலின் பேரிலும் அத்துமீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சிறார்களுக்கும் பலமுறை விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை கூறி, எச்சரிக்கை விடுத்த பின்னரும் இவர்கள் தங்களது தப்பினங்களை திருத்திக் கொள்ளாத நிலை உள்ளதால் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நிறுத்திவிட்டு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற அத்துமீறி செயல்படும் வாகன ஓட்டிகள் மாற்றம் அடைவார்கள் என்பதில் ஐயமில்லை.
எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத்து காவல் ஆய்வாளர் தன்னை மக்கள் மத்தியில் அடையாளம் காட்டிக்கொள்வதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். புகழ்ச்சியை நிறுத்தி விட்டு தனது பணியை திறம்படச் செய்தாலே குற்றச்சம்பவங்கள் குறையும் மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவியும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கூறுகின்றனர்.