
தூத்துக்குடி அருகே பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலகம்- மக்கள் மேம்பாட்டு கழகம் கோரிக்கை
தூத்துக்குடி வட்டத்திற்கு உட்பட்ட தெற்கு சிலுக்கன்பட்டி பகுதியில் கிராம நிர்வாக அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் கிராம நிர்வாக அலுவலகம் குறித்த விளம்பர பலகைகள் ஏதும் வைக்கவில்லை. மேலும், அலுவலகம் உட்புறமாக பூட்டப்பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் சென்றுள்ள மாற்று இடம் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். இந்த பகுதி மக்களின் அலைச்சலை போக்க அரசு நிதி ஒதுக்கி சொந்த கட்டிடம் கட்டி கொடுக்க வேண்டும் என மக்கள் மேம்பாட்டு கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
CATEGORIES மாவட்டம்