
தூத்துக்குடி மாநகராட்சி பகுதி பயன்பாட்டிற்கு புதிய ஜேசிபி மேயர் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தார்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள 60வது வார்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பகுதியில் உள்ள குறைகளை கேட்டறிந்து போர்கால அடிப்படையில் எந்த பணிகளுக்கு முன்னுாிமை கொடுக்க வேண்டும். என்ற பட்டியல் தயாாிக்கப்பட்டு அதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டு நடைமுறைக்கு வருகிறது. தொடக்க காலம் முதல் அப்பணி முடியும் வரை பல்வேறு கட்ட ஆய்வுகளை மேயர் மற்றும் அதிகாாிகள் பார்வையிட்டு ஓப்பந்த தாரர்களுக்கு அறிவுரை வழங்கி நல்ல முறையில் பணிகளை செய்ய வேண்டும் என்று கூறிவருகின்றனர். பல்வேறு பணிகளை மேற்கொள்வது என பல உபகரணங்கள் பயன்பாட்டில் இருந்து வரும் சூழ்நிலையில் மாநகராட்சிக்கு புதிதாக சில பணிகளை மேற்காௌ்வதற்கு வாங்கப்பட்டுள்ள ஜேசிபி இயந்திரத்தை மேயர் ஜெகன் பொியசாமி, ஆணையர் மதுபாலன், ஆகியோர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர்.
கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், ரெக்ஸ்லின், சரவணக்குமாா், முன்னாள் கவுன்சிலர். ரவீந்திரன், மேயாின் நோ்முக உதவியாளர் ரமேஷ், ஆணையாின் நோ்முக உதவியாளர் துரைமணி, மற்றும் பிரபாகர், ஜோஸ்பர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.