
மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு குடிதண்ணீர் பாரபட்சமின்றி வழங்க வேண்டும் தலைவர் சரவணக்குமார் அறிவுரை
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் கோடைகாலம் ஆரம்பமாக இருப்பதால் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி குடிதண்ணீர் வழங்குவது குறித்து ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளரும், ஊராட்சி மன்ற தலைவருமான சரவணக்குமார் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் குடிநீர் விநியோகம் மற்றும் அதன் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ளும் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக ஊராட்சி பகுதியில் உள்ள பணியாளர்களுடன் பேசுகையில் கோடைகாலம் ஆரம்பிக்க இருப்பதால் ஏற்கனவே குடிதண்ணீர் பொதுமக்களுக்கு சூழற்சி முறையில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எந்த பகுதிக்கும் தண்ணீர் வரவில்லை. என்ற குறைபாடுகள் இல்லாமல் சீரான முறையில் வழங்குவதற்கு முழுமையாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் இந்த பகுதிக்கு தேவைப்படுகின்ற அரசு சார்ந்த எந்த கோாிக்கையாக இருந்தாலும் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் மீனவர் நலன் கால்நடை பாராமாிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், வழிகாட்டுதலின்படி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் எடுத்துக்கூறி அதை நிறைவேற்றி தருவேன் மக்கள் நலன் தான் நமக்கு முக்கியம் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டார்.