தூத்துக்குடி வழக்கறிஞர்கள் தேர்தல் காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

தூத்துக்குடி வழக்கறிஞர்கள் தேர்தல் காலத்தில் சிறப்பாக செயல்பட வேண்டும்-அமைச்சர் கீதாஜீவன் அறிவுரை

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆலோசனை படி

திமுக வழக்கறிஞராக பணியாற்றி வந்த ரூபஸ் அமிர்தராஜை திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் மாநகர வழக்கறிஞர் அணி அமைப்பாளராகவும் தலைவராக நாகராஜன், துணைத்தலைவராக ஜேசுராஜாதயான், துணை அமைப்பாளர்களாக ரூபராஜா, அந்தோணி செல்வதிலக், செல்வலட்சுமி, அஜித், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், ஆகியோரை நியமணம் செய்து கட்சி பணியாற்ற நியமணம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில், எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அப்போது அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான தளபதியாாின் ஆட்சியில் செய்த சாதனைகளை வழக்கறிஞர்களுக்கு செய்த உதவிகளையும் முழுமையாக கொண்டு சேர்க்க வேண்டும். தற்போது தேர்தல் காலமாக இருப்பதால் திமுகவில் இருக்கின்ற 23 அணிகளில் வழக்கறிஞர் அணி பங்கு முக்கியம் என்பதை உணர்ந்து எதிர்கட்சியினர் திமுக மீது தவறான குற்றச்சாட்டுகளையும் தேவையில்லாத பதிவுகளுக்கும் விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் நீங்கள் அனைவரும் ஓற்றுமையாக பணியாற்றி கனிமொழி எம்.பியின் அபார வெற்றிக்கு உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மாநகர திமுக ெசயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர்இளம்பாிதி, மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், கருணா, மணி, அல்பட், உள்பட பலர் உடனிருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )