உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் – தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் – தூத்துக்குடி கலெக்டர் உத்தரவு

2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளான 16.03.2024 நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தால் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 பிரிவு 144-A -ன்படி படைக்கலன் உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் படைக்கலனை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே, படைக்கலன் உரிமைதாரர்கள் அருகிலுள்ள காவல்நிலையத்தில் உடனடியாக படைக்கலன்களை ஒப்படைக்க வேண்டும். படைக்கலன்களை ஒப்படை செய்யாமல் பதுக்கி வைத்திருந்தால் அத்தகைய நபர்கள் மீது படைக்கலச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். காவல் நிலையங்களில் ஒப்படைப்பில் வைக்கப்படும் படைக்கலன்கள் தேர்தல் ஆணையத்தின் மறு அறிவிப்பிற்கு பின் உரிமதாரர்களிடம் திருப்ப ஒப்படைக்கப்படும்.

எனவே, துாத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படாதவாறு படைக்கலன் உரிமம் பெற்ற உரிமைதாரர்கள் துப்பாக்கிகளை உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய பொறுப்பு அலுவலர்களிடம் ஒப்படைத்து ஒப்படைத்த விபரத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவித்து மாவட்ட நிருவாகத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி, கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )