மார்ச் 26-ம் தேதி எடப்பாடி  பழனிசாமி தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தகவல்

மார்ச் 26-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தகவல்

மார்ச் 26ல் அதிமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

நடைபெறுகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் அதன்படி வருகிற மார்ச் 26 செவ்வாய்கிழமை அன்று மாலை 03.00 மணிக்கு தூத்துக்குடியில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் எம்.ஜி.ஆர் திடலில் தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். இதுகுறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வைத்து மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநரணி செயலாளர் இரா.சுதாகர், ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், அழகேசன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, தாமோதரன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், பகுதி கழகச் செயலாளர்கள் சேவியர், ஜெய்கணேஷ், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, சார்பு அணி செயலாளர்கள் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி நடராஜன், மாவட்ட மகளிர் அணி நாசரேத் ஜூலியட், இளைஞர் பாசறை ஜெ.ஜெ.தனராஜ், சிறுபாண்மை பிரிவு கே.ஜே.பிரபாகர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், நகர செயலாளர்கள் திருச்செந்தூர் மகேந்திரன், காயல் மௌலானா, பேரூராட்சி செயலாளர்கள் ரவிச்சந்திரன், காசிராஜன், வேதமாணிக்கம், ஆறுமுகநயினார், துரைச்சாமிராஜா, அசோக்குமார், கோபாலகிஷ்ணன், கிங்சிலிஸ்டார்லின், சோமசுந்தரம், வீரவெற்றிவேல், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், நிர்வாகிகள் உரக்கடை குனசேகரன், திருச்செந்தூர் மகாலிங்கம், காந்தி ராமசாமி, தினகரன், கொம்பையா, மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )