
தூத்துக்குடி பல்லோக்கு சமூக சேவை சங்கமும் புனித வின்சென்ட் தே பால் சபையும் இணைந்து 40-வது வார்டுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
மழை வெள்ளத்தில் அதிகம் துன்பப்பட்டாலும், அதையெல்லாம் கடந்து தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புறத்தையும், தூய்மைப்படுத்தி மீண்டும் பழைய நிலைக்கு மக்கள் தங்களுடைய இயல்பான நிலைக்கு வாழ்வதற்கு பேருதவியாக இருந்து தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் தூத்துக்குடி பல்லக்கு சமூக சேவை சங்கமும், தூத்துக்குடி மத்திய சபை புனித வின்சென்ட் தே பால் சபையும் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில் தூத்துக்குடி மறை மாவட்ட பேராயர் மேதகு ஸ்டீபன் ஆண்டகை, தூத்துக்குடி மறைவட்டத் தந்தை அருட்பணி ஜான் பென்ஷன், தூத்துக்குடி பல்நோக்கு சமூக சேவை சங்க இயக்குனர் தந்தை அருள் தந்தை அமலன், அருள் தந்தை சா. தே செல்வராஜ், அருள் தந்தை ஸ்டார்வின், மற்றும் திருச்சி தாசோஸ் இயக்குனர் தந்தை ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை செய்தனர்.
நிகழ்வில் 40வது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரிக்டா ஆர்தர் மச்சாது மற்றும் பகுதி சபா உறுப்பினர் டாக்டர். ஆர்தர் மச்சாது உடனிருந்தார்.