
ஆசிய போட்டியில் சாதனை படைத்த தூத்துக்குடி மாணவி, அமைச்சர் கீதாஜீவனிடம் வாழ்த்து பெற்றார்
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இந்தியாவில் தமிழகம் எல்லா துறையிலும் முதன்மை இடம் பெற்று சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என்று பணியாற்றி வரும் நிலையில், மாநில இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாளக்க துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் விளையாட்டு போட்டிகளில் பங்கு கொள்ளும் தமிழா்கள் உலக அளவில் சாதனை படைக்க வேண்டும். என்ற எண்ணத்ததோடு விளையாட்டை ஊக்குவித்து பல்வேறு உதவிகளை வழங்கி வரும் நிலையில்,
தூத்துக்குடி அழகர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் முத்தம்மாள் காலனியைச் சேர்ந்த முனியராஜு – முத்து செல்வி தம்பதியரின் மகள் கௌசிகா கடந்த ஜூன் 25 முதல் 29ம் தேதி வரை பாகிஸ்தான் நாட்டில் உள்ள இஸ்லாமாபாத்தில் ஆசிய குவாஷ் கூட்டமைப்பு சார்பில் 12 ஆசிய நாடுகளுக்கு இடையே 13 வயதுக்குட்பட்டவர்களுக்கான பிரிவில் நடைபெற்ற ஆசிய ஜுனியர் தனிநபர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதனையடுத்து வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவளை போல்பேட்டை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்