‛டிரம்ப் ஒரு பைத்தியக்காரர்’: சே குவாரா மகள் விளாசல்

0

”அமெரிக்க அதிபர், டிரம்ப், மனித குலத்தை அழித்துவிடுவார்,” என, கியூபா புரட்சியாளர், சே குவாரா மகள், அலெய்டா குவாரா மார்ச், தெரிவித்துள்ளார்.

கரீபியன் தீவு நாடான, கியூபாவில் புரட்சியாளர், சே குவாராவின் மூத்த மகள், அலெய்டா குவாரா மார்ச், 57; தலைநகர், ஹவானாவில் வசித்து வருகிறார். அவர், அளித்த பேட்டியில் கூறியதாவது:
மிகப்பெரும் கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த என் தந்தை, அன்பானவர், ஒழுக்கமானவர் என, பெயர் பெற்றவர். ஆனால், அமெரிக்க அதிபர், டிரம்பிடம், அதிகாரங்கள் குவிந்துள்ளன; மனசாட்சி துளியும் இல்லை.பைத்தியக்காரத் தன்மை அதிகம் உடைய அவரிடம், அதிகாரம் கிடைத்ததால், பிரச்னைகள் அதிகரித்துள்ளன. அவரது நடத்தை, மனித குலத்தை அழித்து விடும்; அதை தடுப்பதற்கு, நாம் இப்போதே தயாராக வேண்டும்.

1997ல், இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்தது மறக்க முடியாது. இந்தியர்கள், நட்புணர்வு மிக்கவர்கள். இவ்வாறு, அலெய்டா கூறினார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.