Breaking News
உயர் மதிப்பு கரன்சி அறிவிப்புக்கு பந்தன் வங்கி வரவேற்பு

ரூ. 500, ரூ. 1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பந்தன் வங்கி வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்திய தொழிலகங்களின் சங்கம் (சி.ஐ.ஐ.) சார்பில் கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசுகையில் பந்தன் வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான சந்திரசேகர் கோஷ் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: நாட்டின் மொத்த கரன்சி புழக்கத்தில் 86 சதவீத அளவுள்ள ரூ. 1,000, ரூ.500 கரன்சியை செல்லாது என அறிவிக்கும் மிகவும் கடினமான முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. நாட்டில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள கள்ள நோட்டுகளையும், கருப்புப் பணத்தையும் ஒழிக்க இந்த நடவடிக்கை நிச்சயம் உதவும்.
இயல்பான பண சுழற்சியை உறுதி செய்ய வேண்டும். மக்களுக்குத் தேவையான பணம் கிடைக்கச் செய்ய வேண்டும். கரன்சி அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பரில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மூன்றாம் காலாண்டில் குறுங்கடன் திட்டத்தின் கீழ் கடன் தொகையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதில் சிக்கல் எழுந்தது. எனவே கடன் அளிப்பதை அப்போது குறைத்தோம். ஆனால் எல்லா மாநிலங்களிலும் அந்தப் பிரச்னை இருக்கவில்லை. சில மாநிலங்களில் மட்டுமே அதுபோன்ற சிக்கலை சந்தித்தோம். இந்த நடவடிக்கை காரணமாக நாட்டின் நிதி நிலை ஸ்தம்பித்துவிடவில்லை என்றார் அவர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.