Breaking News
மனைவியை கணவன் அடிக்கலாம் : பீஹார் பெண்கள் அதிர்ச்சி பதில்

மனைவி வாக்குவாதம் செய்தால், அவரை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உள்ளது’ என, பீஹாரில், 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய பெண்கள் மற்றும் குடும்ப நலத்துறையின் உதவியுடன், தொண்டு நிறுவனம், பீஹாரில், பெண்களின் மனநிலை தொடர்பாக, விரிவான கருத்துக் கணிப்பை, சமீபத்தில் நடத்தியது. இதில், பீஹார் பெண்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

‘கணவனிடம், மனைவி வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது; அவ்வாறு ஈடுபடும் மனைவியை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு’ என, அம்மாநிலத்தைச் சேர்ந்த, 37 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ‘பண்பாடு, விதிமுறைகளை மதித்து நடக்காத மனைவியை அடிக்கும் அதிகாரம், கணவனுக்கு உண்டு’ என, 41 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோலவே, ‘உடலுறவுக்கு மறுக்கும் மனைவியை, கணவன் அடிக்கலாம்’ என, பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், வீடு அல்லது குழந்தைகளை கவனிக்காமல் விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 35 சதவீத பெண்களும், உரிய முறையில் சமையல் செய்யா விட்டால், மனைவியை, கணவன் அடிக்கலாம் என, 30 சதவீத பெண்களும், கூறியுள்ளனர்.

அதேசமயம், ‘மனைவியை, கணவன் அடிக்க தகுந்த காரணம் இருக்க வேண்டும்’ என, வேலைக்கு செல்லும் பெண்களில், 56 சதவீதம் பேர் கருத்து கூறியுள்ளனர். ‘உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால், மனைவி மறுப்பு தெரிவிப்பது தவறில்லை’ என, 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.