Latest News
தெற்கு வங்க கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகிறது- வானிலை மையம்கோரத்தாண்டவம் ஆடியபடி கரையை கடந்தது ‘கஜா’ புயலுக்கு 49 பேர் பலி‘புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நான் விரைவில் போக இருக்கிறேன்’ எடப்பாடி பழனிசாமி பேட்டிஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு!கஜா புயல் இப்போது எங்கு உள்ளது? சேத விவரங்கள்கஜா புயலால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கடும் பாதிப்புகஜா புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் - வானிலை ஆய்வு மையம்நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் முழுமையாக சீராக 2 நாட்கள் ஆகும் : மின் வாரிய அதிகாரிகள் தகவல்கஜா புயலால் இதுவரை 8 பேர் உயிரிழப்புகொங்கனி பாரம்பரிய முறையில் ரன்வீர் - தீபிகா திருமணம்

பிரபாஸின் உருவத்தை தனது முதுகில் பச்சைக்குத்திய ஜெர்மனி ரசிகை

0

ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா உள்ளிட்டோர் நடித்த  பாகுபலி மற்றும் அதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க வசதியாக பிரபாஸ் கடந்த 5 ஆண்டுகளாக வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை.பிரபாஸ் பாகுபலி படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உலகம் முழுவதும் பேசப்படும் நடிகராக உயர்ந்தார்.

பிரபாசின் தந்தை சூர்ய நாராயணராவ். பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் ஆவார். சென்னையில் வசித்த போது பிரபாஸ் பிறந்தார். அதன் பிறகு ஐதராபாத்துக்கு குடியேறினார்கள்.

பாகுபலிக்காக வீட்டில் ‘ஜிம்‘ நிறுவி உடற்பயிற்சியில் ஈடுபட்டார். பாகுபலி முதல் பாகத்துக்காக முதலில் தனது எடையை 22 கிலோ உயர்த்தினார். தொடக்கத்தில் வரும் ஷிவ்து கேரக்டருக்காக உடல் எடையை  குறைத்தார். தொடர்ந்து 2-ம் பாகத்துக்காக  தனது உடல் எடையை 105 கிலோவாக உயர்த்தினார்.

பிரபாஸ் புத்தகம் படிப்பதில் ஆர்வம் கொண்டவர். இதற்காக தனது வீட்டில் நூலகம்  வைத்துள்ளார். ஓய்வு நேரங்களில் நாவல்கள் படிப்பது வழக்கம்.பறவைகள் மீது பிரியம் கொண்டவர். பறவைக் களுக்காக தனி தோட்டம் அமைத்து அதில் ஏராளமான பறவைகளை  வளர்த்து வருகிறார்.

பாகுபலியில்  நடித்துக் கொண்டு  இருந்த போது ரூ.10 கோடி சம்பளத்தில் பல இந்திப் படங்களில் நடிக்க அழைப்பு வந்தது. ஆனால்  பாகுபலிக்காக அவற்றை யெல்லாம் புறக்கணித்து விட்டார். அடுத்து அவர் ‘ஷாகு’ என்ற  படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 2018-ல் வெளியாகிறது. பாகுபலியைத் தொடர்ந்து ‘ஷாகு’ படத்துக்கு  எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பிரபாசுக்கு 37 வயதாகிறது,  இன்னும்  அவருக்கு திருமணம் ஆகவில்லை. பாகுபலி  வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பெண் ரசிகைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் 6,000 ரசிகைகள் பிரபாசை மணக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக ருசிகர தகவல் வெளியாகியுள்ளது

தெலுங்கு சினிமாவில் ’டார்லிங்’ என்பார்கள் பிரபாஸை. அங்கு அவருக்கு ஏராளமான ரசிகர், ரசிகைகள் இருப்பது வழக்கம்தான். ஆனால், வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள்.  ’பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகைகள் அதிகரித்து உள்ளனர்.

சரி, விஷயத்துக்கு வருவோம். பிரபாஸின் உருவத்தை தனது முதுகில் பச்சைக்குத்தி இருக்கிறார்கள் ரசிகை ஒருவர். இந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபாசுக்கு அர்பணிக்கபட்டது என ஒரு வீடியோவும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.