Latest News
திமுக தலைவர் கருணாநிதியை இன்று மாலை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்?மருத்துவமனைக்குள் 6 பேர் கொலை: மாஜி ராணுவ அதிகாரியின் ரத்த வெறிஜீரோ நேரத்தில் விவாதம் : சாதனை படைத்த ராஜ்யசபாஇரத்த தானம் செய்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறைஊழல் வழக்கு: லாலுவுக்கு இன்று தண்டனை அறிவிப்புபாக்., இரட்டை வேடம்: அமெரிக்கா கண்டனம்நமது கலாசார அடையாளங்களுக்கு சாதி, மத, மொழிகள் ரீதியாக தடை கிடையாது கவர்னர் பன்வாரிலால் புரோகித்கர்நாடகாவை கன்னடர்கள்தான் ஆள வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானதற்கு பிரகாஷ்ராஜ் மறுப்புபுதிய மசோதாவை கண்டித்து டாக்டர்கள் இன்று வேலைநிறுத்தம் இந்தியா முழுவதும் போராட்டம்ஆன்லைனில் விற்கும் பொருட்களில் விவரங்கள் கட்டாயம் 1–ந் தேதி முதல் அமலுக்கு வந்தது

செட்டிநாடு இறால் பிரியாணி செய்ய தேவையானவை

0
 • இறால் – அரை கிலோ
 • பாசுமதி அரிசி – 2 கப்
 • வெங்காயம் – 2
 • தக்காளி – ஒன்று
 • பச்சை மிளகாய் – 3
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
 • தயிர் – ஒரு மேசைக்கரண்டி
 • மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
 • கறி தூள் – ஒரு தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – சிறிது
 • பிரியாணி மசாலா – அரை தேக்கரண்டி
 • மல்லித் தழை, புதினா – ஒரு கைப்பிடி
 • உப்பு
 • ஊற வைக்க:
 • இஞ்சி பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி
 • மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
 • மஞ்சள் தூள் – சிறிது
 • சோம்பு தூள் – ஒரு தேக்கரண்டி
 • தாளிக்க:
 • பட்டை – சிறு துண்டு
 • லவங்கம் – 3
 • ஏலக்காய் – 3
 • பிரியாணி இலை – ஒன்று
 • அன்னாசிப்பூ – பாதி
 • மராத்தி மொக்கு – ஒன்று
 • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி

செட்டிநாடு இறால் பிரியாணி செய்வது எப்படி

முதலில் இறாலை சுத்தம் செய்து ஊற வைக்க கொடுத்தவற்றை சேர்க்கவும். இது குறைந்தது ஒரு மணி நேரம் ஊற வேண்டும். பாசுமதி அரிசியை களைந்து 20 நிமிடம் ஊற விடவும். பச்சை மிளகாயை நசுக்கி வைக்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் முக்கால் பதம் வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது, நசுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.பின் இறாலைச் சேர்த்து ஒரு முறை பிரட்டி விடவும். அதிகம் வதக்கக் கூடாது.தயிர் மற்றும் தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.பின் 2 கப் அரிசிக்கு 3 1/4 – 3 1/2 கப் நீர் விட்டு உப்பு, மல்லித் தழை புதினா சேர்த்து கொதிக்க விடவும்.நன்றாக கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மீண்டும் ஒரு கொதி விடவும். பின் மூடி சிறுந்தீயில் வைக்கவும். முக்கால் பதம் வெந்ததும் தம்மில் போடவும். சுவையான செட்டிநாடு இறால் பிரியாணி தயார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.