நீதிபதி முன் விஷம் குடித்து இறந்த போர் குற்றவாளி

0

ஐ.நா. சர்வதேச கோர்ட்டில் நடந்த விசாரணையின் போது போர் குற்றவாளி என கூறப்பட்ட முன்னாள் ராணுவ கமாண்டர் நீதிபதி முன்பாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 1990-ம் ஆண்டு போஸ்சினியா -குரோஷியா போரின் போது ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டார் கொல்லப்பட்டனர். அமெரிக்கா தலையீட்டால் 1995-ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்தது. இதில் யுகோஸ்லாவாகிய ராணுவ கமாண்டராக இருந்த ஸ்லோபோடன் பரால்ஜாக்,72 மீது போர் குற்ற விசாரணை ஐ.நா. சர்வதேச ஐகோர்ட்டில் நடந்து வந்தது.
இதில் 2013ம் ஆண்டு அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் அவர் போர் குற்றவாளி என உறுதியானது. தீர்ப்பை நீதிபதி கேமல் ஆகியூஸ், வாசித்துக்கொண்டிருந்த போது திடீரென ஸ்லோபோடன், தாம் போர்குற்றவாளி அல்ல, தீர்ப்பை ஏற்க முடியாது என கூறி பையில் வைத்திருந்த விஷத்தை எடுத்து நீதிபதி முன்பாக குடித்து மயங்கி விழுந்து இறந்தார்.
பலியான ஸ்லோபோடன் பரால்ஜாக்கிற்கு குரோஷிய பிரதமர் ஆன்ட்ரிஜ் பெலன்கோவிக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.