தியோடர் டிராபியில் அஸ்வின் விலகல்

0

தியோடர் டிராபியில் இருந்து காயம் காரணமாக சீனியர் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் விலகி உள்ளார்.

50 ஓவர் வடிவிலான உள்ளூர் தொடரான தியோடர் டிராபி வரும் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை தரம்சாலாவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் இந்தியா ஏ அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காயம் காரணமாக அவர் இந்தத் தொடரில் விலகி உள்ளதாகவும், அவரை ஒரு வார காலம் ஓய்வில் இருக்க மருத்துவக்குழு அறிவுறுத்தியுள்ளதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

சமீபகாலமாக குறுகிய வடிவிலான போட்டிகளில் யுவேந்திரா சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோருக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் தியோடர் டிராபியில் சிறப்பாக செயல்பட்டால் தேர்வுக்குழுவினரின் பார்வையை அஸ்வின் தன் பக்கம் ஈர்க்க முடியும் என கருதப்பட்டது.

இதற்கிடையே அஸ்வினுக்கு பதிலாக மாற்று வீரராக சபாஷ் நதீம் சேர்க்கப்பட்டுள்ளார். அதேவேளையில் கேப்டனாக அங்கித் பாவ்னே நியமிக்கப்பட்டுள்ளார்

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.