பாகிஸ்தானில் இருந்து வந்த 108 பேருக்கு குடியுரிமை

0

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்த 108 பேருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது.

ஜோத்பூர் டவுன்ஹாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் சர்பூர், குடியுரிமை சான்றிதழ்களை வழங்கினார். பயனாளிகளில் பெரும்பாலானோர் கண்ணீர் பெருக்குடன் சான்றிழிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். அப்போது ‘பாரத மாதாவுக்கு ஜே’ என அங்கு கூடியிருந்தவர்கள் முழக்கமிட்டனர்.

பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தானுக்கு புலம்பெயர்ந்தவர்கள் சந்தித்து வரும் பிரச்சினைகளை அரசு மற்றும் பொதுமக்கள் முன் வைப்பதில் சீமந்த் லோக் சங்கதன் என்ற தன்னார்வ தொண்டுஅமைப்பு முக்கியப் பங்காற் வருகிறது. இந்த அமைப்பின் தலைவர் ஹிந்து சிங் சோடா கூறும்போது, “இவர்களுக்கு குடியரிமை வழங்குவதற்கான ஆணை 2016 டிசம்பரிலேயே பிறப்பிக்கப்பட்டது. இன்னும் சுமார் 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் குடியுரிமைக்காக காத்துள்ளனர்” என்றார். -ஐஏஎன்எஸ்

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.