Breaking News
ஓய்ந்தது பிரசாரம்: பாக்.,கில் ஆட்சியை பிடிப்பாரா இம்ரான் கான்?

பாகிஸ்தானில் பொதுத்தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஒய்ந்தது. நாளை பொதுத்தேர்தல் நடக்கிறது. இதில் இம்ரான்கான் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

பாகிஸ்தானில் நாளை 25-ம் தேதி (புதன் கிழமை) மாகாணங்களுக்கான தேர்தலும், பார்லிமென்ட் தேர்தலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கும், இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே கடுமையான போட்டி உள்ளதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் மொத்தம் 342 பாராளுமன்ற தொகுதிகளில் 272 தொகுதிகளில் பொது வேட்பாளர்களுக்கான வாக்கெடுப்பும், மீதமுள்ள தொகுதிகளில் 10 தொகுதிகள் சிறுபான்மையினருக்கும், 60 தொகுதிகள் பெண்களுக்கு எனவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று முடிவடைய உள்ள நிலையில், 272 தொகுதிகளில் 141 தொகுதிகள் அதாவது பாதிக்கும் மேலான தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளன.

பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 140 தொகுதிகள் தேவை. எனவே பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெறும் கட்சியே மத்தியிலும் ஆட்சி அமைக்கும் என்ற நிலை இருந்து வருகிறது. அதன்படி ஏற்கனவே கைபர் பக்துங்கா பகுதியில் ஆட்சி நடத்தி வரும் தெஹ்ரீக் இ இன்சாப் பஞ்சாப் மாகாணத்திலும் வெற்றி பெறும் சூழல் இருப்பதால், இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என கருத்து கணிப்பு வாயிலாக தெரியவருகிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.