Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

நக்சலைட்டுகளுக்கு விற்க ஆயுதங்களை திருடியதற்காக ஆயுத படை வீரர் மற்றும் நண்பர் கைது

0

சத்தீஷ்காரில் பிஜாப்பூர் மாவட்டத்தின் ஓஸ்ரா கிராமத்தினை சேர்ந்தவர் ராஜு குஜுர். இவர் சத்தீஷ்கார் ஆயுத படையின் 10வது பட்டாலியனில் (ஈ கம்பெனி) கான்ஸ்டபிளாக இருந்து வருகிறார். இவரது நண்பர் மித்தி நேதம்.
இந்த நிலையில், ஆயுத படை முகாமில் இருந்து 2 ரைபிள் ரக துப்பாக்கிகள் மற்றும் 70 சுற்று தோட்டாக்கள் கடந்த சில நாட்களுக்கு முன் திருடப்பட்டன. அதன்பின் கடந்த திங்கட்கிழமை பைரம்கார் பகுதிக்குட்பட்ட வனபகுதியில் ஆற்றின் கரையோரம் அவை கண்டெடுக்கப்பட்டன.

கடந்த சில நாட்களாக விடுமுறையில் இருந்த குஜுரின் தொலைபேசி விவரங்கள் சந்தேக அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் அவரிடம் நடந்த விசாரணையில், நக்சலைட்டுகளுக்கு விற்க ஆயுதங்களை திருடிய விவரத்தினை அவர் ஒப்பு கொண்டுள்ளார்.

கடந்த 5 வருடங்களாக பணத்திற்காக நக்சலைட்டுகளுக்கு தோட்டாக்களை விற்றுள்ளார். முதன்முறையாக துப்பாக்கிகளை விற்க அவர் முயன்றுள்ளார்.

இந்த துப்பாக்கிகளை தலா ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரைக்கும் ஒரு சுற்று கொண்ட தோட்டாக்கள் ரூ.500க்கும் விலை பேசியுள்ளார். குஜுரின் நண்பர் நேதம் ஆயுதங்களை கொண்டு சென்று விற்க உதவியாக இருந்துள்ளார்.

இதனை அடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். குஜுரின் வங்கி கணக்கு விவரங்கள் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.