Breaking News
சர்தார் வல்லபாய் படேல் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு முதல்வர் பழனிசாமிக்கு அழைப்பு

இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்தவரும் இரும்பு மனிதர் என்று வர்ணிக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலுக்கு வரும் 31 ஆம் தேதி பிறந்த தினமாகும். சர்தார் வல்லபாய் படேலின் சாதனைகளை நினைவு கூறும் வகையில், பிரம்மாண்ட சிலை ஒன்று குஜராத்தில் நிறுவப்பட்டு உள்ளது. 2014-ம் ஆண்டு சர்தால் வல்லபாய் படேல் சிலை தொடக்கப்பணிகள் ஆரம்பித்தன. இதற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தானமாக பெறப்பட்டது.

தற்போது இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்ட நிலையில், இந்த சிலையின் திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாட்டில் இருக்கும் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டிருக்கிறது. வல்லபாய் படேல் சிலையின் மொத்த உயரம் 182 மீட்டராகும். 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு உள்ள தீவில் இந்த சிலை கம்பீரமாக நிற்கப் போகிறது. இந்த சிலையை சுற்றி 12 சதுர கி.மீ. அளவுக்கு செயற்கை ஏரி உருவாக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக சிறந்த சுற்றுலா தலங்களுள் ஒன்றாக மாற்ற குஜராத் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்த சிலை திறப்பு விழா வருகிற 31-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநில அமைச்சர்கள், அதிகாரிகள், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு எடப்பாடி கே பழனிசாமிக்கு நேரில் வந்து அழைப்பு விடுத்தனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.