Breaking News
விஜய் மீது சட்டப்படி நடவடிக்கை : அமைச்சர்

கடந்த சில ஆண்டுகளாகவே விஜய் நடிப்பில் வெளியாகும் படங்கள் சர்சையில் சிக்கி வருகின்றன. இது ஏதேச்சையாக நடக்கிறதா அல்லது பப்ளிசிட்டிக்காக நடக்கிறதா என தெரியவில்லை. தற்போது விஜய் நடிப்பில் சர்கார் படம் வெளியாகி உள்ளது.

இந்தப்படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயரை வரலட்சுமிக்கு வைத்திருப்பதுடன் அவரை நெகட்டிவ்வாக சித்தரித்துள்ளனர். அதோடு இலவச திட்டங்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இது தமிழக அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடம்பூர் ராஜூ, அன்பழகன் என அமைச்சர்கள் ஒருவர் பின் ஒருவராக தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தற்போது சட்டத்துறை அமைச்சராக உள்ள சிவி. சண்முகமும் சர்கார் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சர்கார் படத்தில் அரசியல் நோக்கத்திற்காக சில காட்சிகள் இருப்பதால் ஆலோசனைக்கு பிறகு பட தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் மற்றும் படத்தை திரையிட்ட தியேட்டர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.