Latest News
‘ஹூவாய் நிறுவன அதிகாரியை விடுவிக்காவிட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்’ - கனடாவுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கைமுதல் முறையாக ரஷிய அதிபர் புதின் மகள் டி.வி.யில் தோன்றினார்பிரதமர் அலுவலகத்தின் மக்கள் தொடர்பு துறை அதிகாரி மறைவு; பிரதமர் மோடி இரங்கல்ரூ.9 ஆயிரம் கோடி கடன் மோசடி வழக்கு: விஜய் மல்லையா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவாரா? - லண்டன் கோர்ட்டு இன்று தீர்ப்புபொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்திய மந்திரியின் கன்னத்தில் அறைந்த வாலிபர் - மராட்டியத்தில் பரபரப்புஉத்தர பிரதேசத்தில் பனி மூட்டம்: அடுத்தடுத்து வாகனங்கள் மோதல் - 4 பேர் பலிபாகிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் ஷாபாஸ் ஷெரீப் சிறையில் அடைப்புகடற்கரை பகுதியில் இருந்த நிரவ் மோடி பங்களா இடிப்புஇன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபலமாக விளங்கும் உலக தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்நாக்பூரில் இணையதள விளையாட்டு; 17 வயது சிறுமி தற்கொலை

கஜா புயல் இப்போது எங்கு உள்ளது? சேத விவரங்கள்

0

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக மாறியது. தமிழகத்தை நோக்கி வந்த இந்த புயலுக்கு ‘கஜா’ என்று பெயரிடப்பட்டு இருந்தது.

கஜா தீவிர புயலின் மையப்பகுதி நள்ளிரவு கரையை கடந்தது. கஜா புயலின் கடைசி பகுதியும் நாகை – வேதாரண்யம் இடையே இன்று காலை கரையைக் கடந்தது. புயல் கரையைக்கடக்கும் போது நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் காற்று வீசியது

கஜா புயல் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காரணமாக மணிக்கு 111 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கஜா புயல் முழுமையாக கரையை கடந்தது என வானிலை மையம் தகவல் வெளியிட்டு உள்ளது.

* கஜா புயல் தற்போது திண்டுக்கல் பகுதியில் மையம் கொண்டுள்ளது. கஜா புயல் அடுத்த 3 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்.
அடுத்த 24 மணி நேரத்தில் திண்டுக்கல், கரூர் உள்ளிட்ட மாவட்டத்தில் கனமழை பெய்யும், திண்டுக்கல்லில் 60- 70 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

* கஜா புயலால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகராக வேதாரண்யம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

* கஜா புயலால் நாகை ரயில் நிலையம் சின்னாபின்னமானது.

* ஒட்டுமொத்தமாக 12 ஆயிரம் மின் கம்பங்கள் சரிந்துள்ளதாகவும், 421 நிவாரண முகாம்களில் 81,948 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

* தஞ்சையில் தொலைபேசி சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது.

* நாகை மாவட்டத்தில் மட்டும் 5 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் 3 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 4 ஆயிரம் மின்கம்பங்கள் சேதம் அடைந்து உள்ளன. நாகை மாவட்டத்தில் மின் விநியோகம் சீராக 2 நாட்களாகும் என்று மின்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டு உள்ளனர்.

* கடலூர் : கீழப்பெரம்பையில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்தது, 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

* தஞ்சை: மல்லிபட்டினத்தில் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் சேதம் அடைந்து உள்ளன.

* சிவகங்கையில் சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் உயிரிழந்தார்.

* கஜா புயல் காரணமாக பட்டுக்கோட்டையில் சுவர் இடிந்து விழுந்து தூங்கிக்கொண்டிருந்த 4 வாலிபர்கள் பலியானார்கள். கஜா புயலால் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர்.

* காஞ்சிபுரம் மாவட்டம் கல்பட்டு கிராமத்தை சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான உழவு மாடு மீது மின் ஒயர் அறுந்து விழுந்ததில் அது சம்பவ இடத்திலேயே பலியானது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.