Latest News
உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம் வெற்றிபேஸ்புக் வலைத்தளம் முடங்கியதால் அதிர்ச்சி வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் பக்கங்களும் செயலிழந்தன‘விவிபாட்’ எந்திரங்களின் பதிவுகளையும் எண்ணும் விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் முறையிட எதிர்க்கட்சிகள் முடிவுபிரதமர் மோடி பிரசார மேடைக்கு கீழே திடீர் தீ விபத்துதமிழகத்தில் பிரசாரம் நாளை ஓய்கிறது: தேர்தல் கமிஷன் தீவிர கண்காணிப்பு பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவம் வருகைதேர்தலுக்கு பிறகு தான் எனது அரசியல் வாழ்க்கை தொடங்கும் மு.க.ஸ்டாலினுக்கு, எடப்பாடி பழனிசாமி பதில்இந்தியாவில் மனிதர்களின் வாழ்நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.- ஐ.நா. அறிக்கைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததுசென்னை, நாமக்கல், திருநெல்வேலி உட்பட தமிழகத்தில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனைமோடி பிரசார பகுதியில் இறங்க வேண்டிய ராணுவ ஹெலிகாப்டர், ராகுல் காந்தி பேசும் மேடை அருகே இறங்கியது

கழிவுநீர் தொட்டியை சரிசெய்ய முயன்றபோது மண் சரிவில் சிக்கித் தவித்த இளைஞர்: 7 மணி நேரப் போராட்டத்துக்கு பிறகு உயிருடன் மீட்பு

0

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் கழிவுநீர் தொட்டியில் ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்ய 20 அடி பள்ளத்தில் இறங்கியபோது மண் சரிந்து வடமாநில இளைஞர் ஒருவர் சிக்கினர். பின்னர், 7 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீயணைப்பு வீரர்களால் அவர் மீட்கப்பட்டார்.

திருத்தங்கல் அருகே தனி யாருக்குச் சொந்தமான இறகுப் பந்து மைதானத்தை ஒட்டி கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி உள்ளது. இதில், ஏற்பட்ட நீர் கசிவை சரிசெய்வதற்காக மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீபால் (42) என்பவர் சுமார் 20 அடி பள்ளத்தில் இறங்கி, நேற்று காலை வேலைசெய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மண் சரிவு ஏற்பட்டு ஸ்ரீபால் அதில் சிக்கிக்கொண்டார். இதுகுறித்து, சிவகாசி மற்றும் விருதுநகர் தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மண் சரிவில் சிக்கிக் கொண்ட ஸ்ரீபாலை மீட்க கடும் முயற்சி மேற்கொண்டனர். அவரது இடுப்புக்குக் கீழ் பகுதி முழுவதும் சேற்றில் சிக்கிக் கொண்டதால் அவரால் உடலை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து 7 மணி நேரம் வரை முயன்று, மண் சரிவில் சிக்கி போராடிய ஸ்ரீபாலை மீட்டனர்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.