Latest News
மக்களுக்கு தேவையான அளவு தண்ணீர் லாரிகள் மூலம் வினியோகம் எடப்பாடி பழனிசாமி பேட்டிதிமுக பொருளாளர் துரைமுருகன் சென்னை அப்பலோ மருத்துவமனையில் அனுமதிகுடிநீருக்காக கண்ணீர் சிந்தும் சென்னைவாசிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தங்கும் விடுதிகள் மூடல்தண்ணீர் பற்றாக்குறையால் சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கழிப்பறைகள் மூடல் நோயாளிகள் அவதிகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்துஉத்தர பிரதேசத்தில் சாலை விபத்து: 8 பேர் பலி, 11 பேர் காயம்அயோத்தி தாக்குதல் வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனைதடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால்இன்று முதல் அபராதம் விதிக்கப்படும்ரூ.100 முதல் ரூ.5 லட்சம் வரை வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கைமேற்கு வங்காளத்தில் போராடும் மருத்துவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் டாக்டர்கள் வேலைநிறுத்தம்கடும் வெப்பம், அனல் காற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

சின்ன தவறால் இந்தியா தோல்வி! திட்டு வாங்கும் தினேஷ் கார்த்திக்

0

இந்தியா – நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த தோல்விக்கு தினேஷ் கார்த்திக் செய்த ஒரு சிறிய தவறு என பொரிந்து தள்ளுகிறார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

3வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 212 ரன்கள் குவித்தது. பின்னர் பேட்டிங் செய்த இந்திய அணியில் தவான், தோனி தவிர்த்து மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக், க்ருனால் பண்டியா அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை யில் தினேஷ் கார்த்திக் அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்தார் . அடுத்த பந்தில் ரன் எடுக்கவில்லை. மூன்றாவது பந்தை அடித்து ஆடினார் தினேஷ். அப்போது க்ருனால் பண்டியா பாதி தூரம் ஓடி வந்தார். ஆனால், தினேஷ் ரன் வேண்டாம் என மறுத்து விட்டார்.

இதையடுத்து தினேஷ் கார்த்திக் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்தார், ஆனால், அதற்கு முன்பே இந்தியா வெற்றி பெற முடியாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு தினேஷ் கார்த்திக் அந்த ஒரு ரன் ஓட மறுத்தது தான் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

இது பற்றி சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். “தினேஷ் கார்த்திக் சிறப்பாக ஆடினார். ஆனால், சிறு தவறுகள், டி20 களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும். எதிர் பக்கம் க்ருனால் பண்டியா இருக்கும் போது அந்த ஒரு ரன் ஓடாதது தவறு” என்றார்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.