Breaking News
பன்னீருக்கு ஆதரவா? ஸ்டாலின் மறுப்பு

பன்னீர் செல்வத்திற்கு தி.மு.க.ஆதரவு தரும் என கட்சியின் மூத்த நிர்வாகியான சுப்புலெட்சுமி ஜெகதீசன் கூறியதாக செய்திகள் வெளியாயின.

இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறியது, சுப்புலெட்சுமி ஜெகதீசனின் பேட்டியில் தி.மு.க.விற்கு உடன்பாடு இல்லை. தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தலைவர், பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார்கள். அதுவரை மூத்த நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.