Breaking News
நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: டோனிக்கு அபராதம் விதிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் போட்டியில், கடைசி ஓவரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோபாலாக மெயின் அம்பயர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபால் தர மறுத்தார்.

இதனால், அதிருப்தி அடைந்த சாண்ட்னர் மற்றும் ஜடேஜா ஆகிய இரு பேட்ஸ்மேன்களும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக இது போன்ற இக்கட்டான தருணங்களில், சாந்தமாக இருக்கும் டோனி, நேற்று ஆக்ரோஷப்பட்டார். மைதானத்திற்குள் வந்த டோனி, கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், நடுவர்கள் நோபாலாக அறிவிக்க மறுத்துவிட்டனர். கடைசி பந்தில் சிக்சர் விரட்டி சென்னை அணியை சாண்டனர் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை அபராதமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறி விட்டதாக டோனியும் ஒப்புக்கொண்டுள்ளார்.

போட்டி முடிந்த பிறகு, நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், விழாவை தொகுத்து வழங்கிய முரளி கார்த்திக், டோனியிடம் இவ்விவகாரம் குறித்து எந்த ஒரு கேள்வியை கேட்காதது வியப்பை அளித்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.