Latest News
தீவிரவாதிகள் ஊடுருவல் சோதனை; ஏ.டி.எம். மைய கொள்ளையன் கைதுபொருளாதார சரிவில் இருந்து மீள மத்திய அரசு அதிரடி நடவடிக்கை - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்புபெண் குழந்தை பெற்ற மனைவிக்கு முத்தலாக் வழங்கிய கணவஅமலாக்கப்பிரிவு வழக்கில் 26-ந் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுஅமெரிக்காவில் வீடியோ கேம் போட்டியில் ரூ.20 கோடி வென்ற சிறுவன்3 கோடி சந்தாதாரர்களுடன் யூ-டியூப்பில் பிரபலம்: 6 வயது சிறுமியின் மாத வருமானம் ரூ.21 கோடிகர்நாடக முன்னாள் முதல் மந்திரி எஸ்.எம் கிருஷ்ணாவின் மருமகன் விஜி சித்தார்த் மாயம்வனப்பகுதியில் படமாக்கப்பட்ட சாகச நிகழ்ச்சியில் மோடி: டிஸ்கவரி சேனலில் ஆகஸ்டு 12-ந் தேதி ஒளிபரப்பாகிறது

பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்த வாய்ப்பு – இலங்கை அரசு எச்சரிக்கை

0

இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை தினத்தன்று பயங்கரவாதிகள் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தினர். அதில், 253 பேர் பலியானார்கள். குண்டு வெடிப்பால் ஏற்பட்ட பீதி இன்னும் நீங்கவில்லை.

இந்நிலையில், குண்டு வெடிப்பை நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகள் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டமிடக்கூடும் என்று இலங்கை அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பான போலீஸ் சுற்றறிக்கை கசிந்துள்ளது. அதில், கொழும்பு நகரின் நுழைவாயிலில் அமைந்துள்ள சில பாலங்கள், வடக்கு கொழும்பில் உள்ள மேம்பாலம் ஆகியவற்றை 6-ந் தேதிக்குள் பயங்கரவாதிகள் குண்டு வைத்து தகர்க்கும் அபாயம் இருப்பதாக போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து, பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பயங்கரவாதிகள், அவர்களின் மறைவிடங்கள், வெடிபொருட்கள், ஆயுதங்கள் மற்றும் இதர போர்த்தளவாட பொருட்களை தேடி, இலங்கை ராணுவமும், அதன் துணை அமைப்புகளும் நாடு முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன. இதற்கு போலீசாரும் உதவி வருகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.