Latest News
அதிகாரிகள் மெத்தனத்தால் உயிரிழப்பு: ஐகோர்ட் வேதனைஇந்தியாவின் பொருளாதாரம் பலவீனம் : ஐஎம்எப்60 வயதுக்கு பிறகு கிடைக்கும்: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் புதிய திட்டத்தை - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்நாடு முழுவதும் வங்கிகள் இணைப்பை எதிர்த்து: அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தம் - 25-ந்தேதி நள்ளிரவு முதல் நடக்கிறதுபற்றி எரியும் அமேசான் காடு: காட்டுத்தீயை அணைக்க களத்தில் இறங்கிய அதிபர்மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இன்று கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு: ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்கள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்காஷ்மீர்: அரசியல் தலைவர்கள் படிப்படியாக விடுதலை செய்யப்படுவார்கள் எனத்தகவல்வருமான வரி விகிதம் குறைகிறது - மத்திய அரசுக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு

4 சட்டமன்ற தொகுதி மக்கள் பயன் அடையதமிழக அரசின் சாதனைகள் என்னென்ன?ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பட்டியல்

0

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தமிழக அரசின் சாதனைகள் குறித்து கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா வழியில் சிறப்புமிக்க மக்கள் பணியில், இந்த அரசின் முக்கிய சில சாதனைகள் வருமாறு:-

* சுமார் 1 கோடியே 86 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா அரிசி.

* ஏழை-எளிய மக்கள் பயன்பெற 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம். விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம். கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம்.

* தமிழகத்தை மின்மிகை மாநிலமாக உயர்த்தியது.

* தாலிக்கு தங்கத்துடன் கூடிய திருமண நிதியுதவி. உயர்த்தப்பட்ட மகப்பேறு நிதியுதவி.

காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு

* கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் 50 ஆண்டு கால கோரிக்கையான அத்திக்கடவு-அவினாசி திட்டம் ரூ.1,652 கோடியில் தொடக்கம்.

* காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி நீர் மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைத்தது.

* குடிமராமத்து திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரியது.

* 83 ஆண்டுகளுக்கு பிறகு, முதல் முறையாக மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது.

* விவசாயிகளுக்கு இலவசமாக வண்டல் மண் வழங்கியது.

* கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றுக்கு சிறந்த மாநிலங்களுக்கான விருது.

எய்ம்ஸ் ஆஸ்பத்திரி

* அயல் நாட்டில் ஆவின் விற்பனை மூலம் வெண்மைப் புரட்சிக்கு வித்திட்டது.

* விவசாய துறைக்கு தொடர்ந்து 3 ஆண்டுகள் தேசிய விருதை வென்று சாதனை புரிந்தது.

* உடலுறுப்பு தானத்தில் இந்தியாவுக்கே வழிகாட்டியாய் தமிழ்நாடு திகழ்கிறது.

* உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.3 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்து, சுமார் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு.

* சிறு, குறு விசைத்தறியாளர்கள் பெற்ற மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளுபடி செய்ய பரிசீலனை.

* ரூ.1,264 கோடியில் 262.62 ஏக்கரில் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் ஆஸ்பத்திரி.

* மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரியில் ரூ.150 கோடியில் மேம்பாட்டு பணி.

* திருமங்கலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய வருவாய் கோட்டம் உருவாக்கம்.

புயல் புகலிட காப்பகம்

* 240 கிராம ஊராட்சிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மேலூர்-காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம்.

* மதுரை-தோப்பூர் பச்சம்பட்டியில் புதிய துணைக்கோள் நகரம்.

* ஓட்டப்பிடாரம் தருவைகுளத்தில் ரூ.250 கோடியில் புயல் புகலிட காப்பகம்.

* ரூ.225 கோடியில் பில்லூர் குடிநீர் மேம்பாட்டுத் திட்டம்.

* சூலூர் அரசு ஆஸ்பத்திரி, தாலுகா ஆஸ்பத்திரியாக தரம் உயர்வு.

* கரூர் மாவட்டம் புகளூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கம்.

* ரூ.490 கோடியில் புஞ்சை புகளூர்-பரமத்தி வேலூருக்கு இடையே புதிய கதவணை.

* ரூ.250 கோடியில் அரவக்குறிச்சி-பரமத்தி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்த நடவடிக்கை.

* கோவை கண்ணம்பாளையத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் ராணுவ தளவாட உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை உருவாக்கம்.

அ.தி.மு.க. அரசு மிடுக்கோடு நடைபெற…

‘மக்கள் தொண்டே மகேசன் தொண்டு’ என்ற அண்ணா காட்டிய அன்புப் பாதையில், எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆகியோர் வழியில் ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்ற நல்ல நோக்கத்துக்காக செயல்படும் இந்த அரசு மெருகோடு, மிடுக்கோடு தொடர்ந்து நடைபெற, வருகின்ற 19-ந்தேதி நடைபெறும் 4 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில், உங்களின் பொன்னான ஆதரவை ‘இரட்டை இலை’ சின்னத்தில் வழங்கி, அ.தி.மு.க. வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, அதன் மூலம் நயவஞ்சக நரி சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்த நல்லாட்சியின் மீது தமிழக மக்கள் கொண்டிருக்கும் பற்றையும், பாசத்தையும் உறுதிபட இந்நாட்டுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என வாக்காளர்களை அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.