Latest News
குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்க கோரிய வழக்கு : சி.பி.சி.ஐ.டி. 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவுகூட்டணி என்பதால் குட்டகுட்ட குனிய மாட்டோம் -பிரேமலதா விஜயகாந்த்குரூப்-4 தேர்வில் அழியும் மையால் எழுதி முறைகேடு 99 பேருக்கு வாழ்நாள் தடை 3 இடைத்தரகர்கள் கைது; 2 தாசில்தார்களிடம் விசாரணைசென்னை மெரினா கடற்கரையில் குடியரசு தினவிழா நாளை கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசிய கொடி ஏற்றுகிறார்டெல்லியில் ரூ.1,000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் அழிப்புகுற்றப்பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் ‘டிக்கெட்’ கொடுக்கக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டில் தேர்தல் கமிஷன் யோசனை

இதயநோய் வராமல் பாதுகாக்கும் சுவையான கேரட் சட்னி ரெசிபி!

0

கேரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டின் நமது உடலில் உள்ள செல்களை புதுப்பித்துக் கொண்டே இருக்கும். பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. அத்துடன் இதில் இருக்கும் பால்காரினால், பால்காரின்டியோல் ஆகியவை புற்று நோய் வராமல் பாதுகாக்கும். கேரட் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இதய வால்வுகளில் கொழுப்பு அடைக்காமல் இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை மிகவும் குறைகிறது. சுவையான கேரட் சட்னி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!!

தேவையானவை: கேரட் – 2, வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – 5, பூண்டு – 2 பல், புளி – சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயம், கேரட், பச்சை மிளகாய், புளி, பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின்னர் வதக்கியவற்றை மிக்சி ஜாரில் போட்டு உப்பு சேர்த்து, கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சட்னியுடன் சேர்த்தால் சுவையான கேரட் சட்னி தயார்!

தோசை, இட்லிக்கு கேரட் சட்னி அருமையான சைட்டீஷ் ஆக இருக்கும். இது பார்க்க கலர்ஃபுல்லாக இருப்பதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.