Breaking News
மத்திய மந்திரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவு ‘‘3 மாத பயண விவரங்களை தாக்கல் செய்யுங்கள்’’

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சமீபத்தில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மந்திரிகள் தங்கள் 3 மாத பயண விவரங்கள் குறித்த அறிக்கையை 13–ந் தேதிக்குள் (இன்றைக்குள்) சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதற்கு ஒருங்கிணைப்பாளராக கிராமப்புற வளர்ச்சி மேம்பாட்டுத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரை அவர் நியமித்தார்.

மந்திரிகள் தங்கள் அறிக்கையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு கடந்த 3 மாதங்களில் தங்களின் பாராளுமன்ற தொகுதி உள்பட எங்கெங்கு பயணம் செய்தார்கள்?, அப்படி பயணம் செய்யாதவர்கள் டெல்லியில் தங்கள் அலுவலகத்தில் பணிபுரிந்தார்களா? என குறிப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

மந்திரிகள் தங்கள் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் சென்று மக்கள் சேவை செய்தார்களா? கடந்த ஆண்டு நவம்பர் 8–ந் தேதி எடுக்கப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்களா? தங்கள் அலுவலகங்களில் கோப்புகளை ஆய்வு செய்தார்களா? என்பதை அறியவே இந்த அறிக்கை பெறுவதின் நோக்கம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.