Breaking News
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் அதை தெரிவிப்பேன் – ரோகித் சர்மா

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பைபோட்டியில் சதம் அடித்து ஆட்ட நாயகன் விருது பெற்ற இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த நினைத்தோம், அதுவும் நிறைவேறியது.

இந்தப் போட்டியில் எனது ஆட்டம் திருப்திகரமாக இருந்தது. நான் இரட்டைச்சதம் அடிக்க வேண்டும் என்று எப்போதும் நினைத்ததில்லை. அதுபோன்று தான் இந்த போட்டியிலும் நான் அதுகுறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை. எப்போதுமே முடிந்தவரை ஆட்டமிழக்காமல் ஆடவே திட்டமிடுவேன்.

ஸ்கோரை உயர்த்த சரியான சந்தர்ப்பம் அமைந்த போது நான் ஆட்டமிழந்து விட்டேன், அது எனக்கு மிகவும் வருத்தமளித்தது. ராகுல், குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டனர்.

அப்போது நிருபர் ஒருவர், நீண்டகாலமாக பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. எனவே சக வீரராக பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு நீங்கள் பரிந்துரைப்பது என்ன? என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா,

இதை நான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்திருந்தால் தெரிவித்திருப்பேன். இப்போது எதைக் கூற முடியும் என்று கூறினார் .

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.