Breaking News
ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன் இருக்கிறாரா? சமூக வலைத்தளத்தில் வைரலாகும் புகைப்படம்

சிறந்த உழைப்பாளர், சிறந்த நிர்வாகத்தலைவர், தொழில்நுட்ப விஞ்ஞானி என பல்வேறு புகழ்களுக்கு சொந்தக்காரரான இவர், கடந்த 2011-ம் ஆண்டு, தனது 56 வயதில் புற்றுநோய் காரணமாக உயிர் இழந்தார்.

இந்நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ் உயிருடன்தான் இருக்கிறார் என்றும், அவர் எகிப்தில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார் என்றும் சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன.

எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் எடுக்கப்பட்ட, அப்படியே ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் ஒருவரின் புகைப்படம்தான் இதற்குக் காரணம்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட சிறிது நேரத்திலேயே வைரலானது. ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற உருவத்தில் இருக்கும் அந்த நபரின் புகைப்படத்தை பலரும் பகிர்ந்து, “ஸ்டீவ் ஜாப்ஸ் உயிரிழக்கவில்லை இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்” என பதிவிட்டனர்.

ஒரு சிலரோ ஒரு படி மேலே சென்று “ஸ்டீவ் ஜாப்ஸ் ‘ஷூ’ அணிய விரும்ப மாட்டார். புகைப்படத்தில் உள்ள நபரும் ஷூ அணியவில்லை. எனவே அவர் நிச்சயமாக ஸ்டீவ் ஜாப்ஸ் தான்” என கூறினர். அதே சமயம் மற்றொரு தரப்பு, “அவர் கையில் ஆப்பிள் கடிகாரம் அணியவில்லை எனவே இவர் ஸ்டீவ் ஜாப்ஸ் இல்லை” எனவும் தெரிவித்தனர். இன்னும் சிலர், “இவரை பார்த்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் போல தெரியவில்லை ஸ்டீவ் நோ ஜாப்ஸ் (அதாவது புகைப்படத்தில் இருப்பவர் வேலையில்லாத ஏழ்மையான நபர்) போல தெரிகிறது” என வேடிக்கையாக கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.