Breaking News
இந்தியாவின் பொருளாதாரம் பலவீனம் : ஐஎம்எப்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளதாக சர்வதேச நிதி முனையம் (International Monetary Fund (IMF) தெரிவித்துள்ளது. சில வங்கி சாரா நிதி அமைப்புக்களில் நிச்சயமற்ற தன்மை நிலவுவது, பலவீனங்கள் நீடிப்பது ஆகியன இதற்கு காரணங்களாக சொல்லப்பட்டுள்ளது.

ஐஎம்எப் ஜூலை மாதம் வெளியிட்ட அறிக்கையில், 2019 மற்றும் 2020 ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மந்தமடைந்திருக்கும் என குறிப்பிட்டிருந்தது. தற்போது ஜிடிபி முறையே 7 மற்றும் 7.2 சதவீதமாக எதிரொலிப்பது, உள்நாட்டில் தேவை அதிகம் உள்ளதால் எதிர்பார்த்ததை விட பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது.

அதேசமயம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளது என சீனாவில் இயங்கி வரும் வாஷிங்டனை சேர்ந்த நிதி அமைப்பு தெரிவித்திருந்தது. தற்போது செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய ஐஎம்எப் செய்தி தொடர்பாளர் கேரி ரைஸ் கூறுகையில், சமீப காலமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட பலவீனமாக உள்ளது. சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் தொடரும் மந்தநிலை, நிச்சயமற்ற நிலை ஆகியவையே இதற்கு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.