ஆஸ்திரேலியா அரசு அமைப்புகளை குறிவைத்து இணைய தாக்குல்

0

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நாடு ஒரு சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதாக சீனாவை மறைமுகமாக குற்றம்சாட்டினார்.
பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் மற்றும் அரசாங்கத்தை குறிவைத்து வெளிநாட்டு சக்திகளால் ஆஸ்திரேலியா இணைய தாக்குதலுக்கு இலக்கானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாவது:-

ஒரு ‘அதிநவீன அரசு ஒன்று இணைய தாக்குதல்களுக்குப் பின்னால் இருக்கிறது. இது பல மாதங்களாக நடந்து வருவதாக குறிப்பிட்ட அவர், ஆனால் சமீபத்தில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற அதி நவீன தாக்குதலை முன்னெடுக்க உலகில் விரல் எண்ணிக்கையிலான நாடுகளே உள்ளன .

இருப்பினும் இதுவரையான விசாரணையில் எந்த தனிப்பட்ட தரவுகளும் களவு போகவில்லை என்றே தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் முக்கிய அமைப்புகள் அனைத்தும் தற்போது ஒரு அதிநவீன இணைய தாக்குதலால் குறிவைக்கப்படுகின்றன.அரசாங்க அலுவலகங்கள், தொழிற்சாலைகள், அரசியல் கட்சிகள், கல்வி, சுகாதாரம், அடிப்படை சேவைகள் வழங்குவோர் மற்றும் பிற உள்கட்டமைப்பை செயற்படுத்துவோர் என இந்த பட்டியல் நீள்கிறது.இந்த விவகாரம் தொடர்பாக உடனடியாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனை தொடர்பு கொண்டு பேசி உள்ளேன் என கூறினார்.

கடந்த ஆண்டு மே மாதம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றம் மற்றும் மூன்று பெரிய அரசியல் கட்சிகள் மீது சைபர் தாக்குதலை சீனா முன்னெடுத்தது கண்டறியப்பட்டது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.