Breaking News
அமெரிக்க நாடாளுமன்றம் கேபிடல் கட்டிடத்தின் மீது தாக்குதல் பாதுகாப்பு அதிகாரி உயிரிழப்பு- ஜோ பிடன் அதிர்ச்சி

வாஷிங்டன்

மர்ம நபர் ஒருவர் ஒட்டிவந்த கார் அமெரிக்க நாடாளுமன்றம் அமைந்துள்ள கேபிடல் கட்டிடத்தின் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தது. காரில் இருந்து இறங்கிய மர்ம மனிதன் அங்கிருந்த பாதுகாவலரை கத்தியால் தாக்க முயன்றார். இதனால் பாதுகாவலர் சுட்டதில் மர்ம மனிதன் படுகாயம் அடைந்தார்.

உடனடியாக மர்ம மனிதன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இந்த தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தாக்குதலில் ஈடுபட்ட நபரின் அடையாளங்களை பாதுகாப்புதுறை வெளியிடவில்லை. இந்த தாக்குதலில் போலீஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்தார். மேலும் மற்றொரு போலீஸ் அதிகாரி படுகாயமடைந்துள்ளார்.

இதன் பின்னணியில் பயங்கரவாதிகளின் தொடர்புகள் ஏதும் இருப்பதாக தெரியவில்லையென வாஷிங்டன் பெருநகர காவல்துறைத் தலைவர் ராபர்ட் கான்டி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜோ பிடன் இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்க கேபிடல் போலீஸ் அதிகாரி வில்லியம் எவன்ஸை உயிர்த்தியாகம் செய்து உள்ளார். மேலும் ஒரு சக அதிகாரி தனது உயிருக்கு போராடிவருகிறார். அதிகாரி எவன்ஸின் குடும்பத்தினருக்கும், அவரை இழந்து வருந்தும் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.கேபிடலில் பணிபுரியும் அனைவருக்கும் இது ஒரு கடினமான நேரம் என்பது எனக்குத் தெரியும் என்று பிடன் கூறி உள்ளார்.

ஜனவரி 6ம் தேதி நடந்த கலவரத்தை அடுத்து நாடாளுமன்றத்தின் வடக்கு பகுதி பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தாலும், சமீபத்தில் நீக்கப்பட்டிருந்தது. தற்போது கார் மூலம் தாக்குதல் நடந்த நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.