Breaking News

திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிப்பபரப்புவதற்கு முன்பு தேசியக்கீதத்தை இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. jana-gana-manaநாடு முழுவம் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன்பு தேசியக் கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அப்போது திரையயில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் தேசியக் கீதம் இசைக்கப்படும் போது மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனை செயல்படுத்தாத சினிமா தியேட்டர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்தியரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளின தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் இதுதொடர்பான விளம்பரம் ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.