Breaking News
மண்டேலாவுடன் சிறைவாசம் அனுபவித்த இந்திய தலைவர் கத்ராடா உயிரிழந்தார்

தென் ஆப்பிரிக்காவில் நிற வெறிக்கு எதிராக போராடி முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவுடன் அதிக ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த இந்தியர் அகமது கத்ராடா நேற்று உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட கத்ராடா கடந்த 4-ம் தேதி அவரது அறக் கட்டளை சார்பில் தொடங்கப் பட்ட டொனால்டு கார்டான் மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். ஆரம்பத்தில் அவருக்கு நீர்சத்து குறைவாக இருந்ததற்கான சிகிச்சை அளிக்கப்பட்ட நிலை யில், திடீரென அவரது மூளையில் ரத்த கட்டி உருவானது கண்டுபிடிக் கப்பட்டது. உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டி அகற்றப் பட்டது. எனினும் அவரது உடல் நிலை இயல்பு நிலைக்கு திரும்ப வில்லை. நேற்று அவரது உடல் நிலை திடீரென மோசமடைந்ததும், அவரை காப்பாற்ற மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்ட னர். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

கத்ராடாவின் மறைவுக்கு தென் ஆப்பிரிக்கா அதிபர் ஜேக்கப் ஜுமா ஆழ்ந்த இரங்கல் தெரிவித் துள்ளார். அவர், ‘‘தனது வாழ் நாளின் பெரும்பகுதியை சுய நலமில்லாமல் வாழ்ந்தவர். அவரது இறுதிசடங்கு அரசுமுறைப்படி பிரத்யேகமாக நடக்கும்’’ என தெரி வித்துள்ளார். மேலும் துக்கம் அனு சரிக்கும் வகையில் அந்நாட்டின் தேசியகொடி அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அதே சமயம் கத்ராடாவின் குடும்பத்தினர் அவரது இறுதிச்சடங்கை தனிப் பட்ட முறையில் நடத்த அனுமதிக் கும்படி அதிபரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மண்டேலா அறக்கட்டளையும் கத்ராடாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. கத்ராடாவின் இறுதிச்சடங்கு முஸ்லிம் மத முறைப்படி நடக்கவுள்ளது.

யார் இந்த கத்ராடா?

நிறவெறிக்கு எதிராக போராடி 26 ஆண்டுகள் 3 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அகமது கத்ராடா. விடுதலைக்குப் பின் சமூக முன்னேற்றத்துக்காக பாடு பட்டவர். நெல்சன் மண்டேலாவை தனது மூத்த சகோதரர் என அழைத்தவர். இனவெறி போராட் டத்தில் ஈடுபட்டதால் நெல்சன் மண்டேலாவுடன் சேர்த்து இவருக் கும் ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆன்ட்ரூ லங்கேனி மற்றும் டெனிஸ் கோல்டுபெர்க் என்பவர்களும் இவருடன் சிறைவாசம் அனுபவித்தனர்.

தென் ஆப்பிரிக்காவின் முதல் ஜனநாயக அதிபராக 1994-ல் நெல்சன் மண்டேலா தேர்ந்தெடுக் கப்பட்ட போது, அந்நாட்டின் கொள்கைளை வகுத்ததில் இந்த மூவருக்கும் முக்கிய பங்கு உள்ளது. அவருக்கு இந்தியா சார்பில் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான வெளிநாடு வாழ் இந்தியர்கள் விருது கடந்த 2005-ல் வழங்கப்பட்டது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.