Breaking News
ஜெயலலிதா மனதளவிலும் உடலளவிலும் திடமாக இருக்கிறார்: டாக்டர் பிரதாப் சி.ரெட்டி தகவல்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருக்கிறார் என்று அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறினார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருந்த நோய்த்தொற்றுகள் குணமடைந்துவிட்டன. அவர் புத்துணர்ச்சி பெற வேண்டியுள்ளதால் இன்னும் மருத்துவமனையில் இருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். மனதளவிலும், உடலளவிலும் திடமாக இருக்கிறார்.

தற்போது சாதாரண உணவுகளை எடுத்துக்கொள்கிறார். முதல்வரின் விருப்பம் பொறுத்தே வேறு வார்டுக்கு மாற்றப்படுவார். முதல்வர் வீடு திரும்புவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்று கூறினார்.

முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல்நலக் குறைவு காரண மாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலை யில் உள்ள அப்போலோ மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினரின் ஆலோ சனையின்படி அப்போலோ மருத்துவமனை மூத்த டாக்டர்கள் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்துள்ள பெண் பிசியோதெரபி நிபுணரும் முதல்வருக்கு தொடர்ந்து பிசியோ தெரபி சிகிச்சை அளித்து வருகி றார். அவர் இயற்கையாகவே சுவாசிக்கத் தொடங்கியதால், அவருக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாச கருவிகள் அகற்றப்பட்டன.

ஆனால் அவசர தேவைக்காக அவருடைய தொண்டை பகுதி யில் பொருத்தப்பட்டிருந்த டிரா கோடமி கருவி மட்டும் அகற்றப் படவில்லை. உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த முதல்வர் தனி வார்டுக்கு (விஐபி வார்டு) மாற்றப்பட்டார். இந்நிலையில் முதல்வருக்கு அவ்வப்பொழுது செயற்கை சுவாசம் தேவைப் படுவதால், அவர் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக அப்போலோ மருத்துவமனைகள் குழுமத் தலைவர் டாக்டர் பிரதாப் சி.ரெட்டி கூறியுள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.