Breaking News
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா – புனே இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இருமுறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மறுஎழுச்சி கண்டுள்ள ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.

கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. தொடர் வெற்றிகளை குவித்த இந்த அணி கடைசியாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 48 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய அளவிலான தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்வியால், ஹாட்ரிக் வெற்றி பெற்று மும்பை அணி யைவிட இரு புள்ளிகள் கூடுதலாக பெற்றிருந்த கொல்கத்தா அணியின் தொடர்ச்சியான வெற்றிகளை ஹைதராபாத் அணி தடுத்து நிறுத்தியது.

மும்பை அணி 8 வெற்றிகளை குவித்து 16 புள்ளிகளுடன் முதல் அணியாக பிளே ஆப் சுற்றை உறுதிப்படுத்திக் கொண்டுள்ளதால் தற்போது கொல்கத்தா அணிக்கு சற்று நெருக்கடி உருவாகி உள்ளது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி வசப்படும் பட்சத்தில் கொல்கத்தா அணியும் பிளேப் சுற்றில் கால்பதிப்பதில் எந்தவித சிக்கலும் இருக்காது என கருதப்படுகிறது.

பெரிய அளவிலான இலக்கை அசால்ட்டாக எட்டும் கொல்கத்தா அணி, ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 210 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் போனது அந்த அணிக்கு பின்னடைவாகவே கருதப் படுகிறது. இந்த ஆட்டத்தில் கொல் கத்தா அணியை 161 ரன்களுக் குள் ஹைதராபாத் அணி கட்டுப் படுத்தியது.

ராபின் உத்தப்பா மட்டுமே 53 ரன்கள் சேர்த்து போராடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் எந்த ஒரு வகையிலும் எதிரணிக்கு சவால் கொடுக்கும் வகையில் முழுத்திற னையும் வெளிப்படுத்த தவறினர். ஒரு சில ஆட்டங்களில் அதிரடி தொடக்கம் கொடுத்த சுனில் நரேன் தற்போது தடுமாறி வருகிறார்.

காம்பீர், உத்தப்பா மட்டுமே அணியை சிறப்பாக முன்னெடுத்துச் செல்கின்றனர். மணீஷ் பாண்டே, யூசுப் பதான் ஆகியோரிடம் இருந்து எதிர்பார்த்த அளவில் பெரிய அளவி லான ரன்குவிப்புகள் நிகழவில்லை. சூர்யகுமார் யாதவுக்கு பதிலாக களமிறக்கப்பட்ட ஷெல்டன் ஜாக்சனும் பேட்டிங்கில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லை. இதனால் இன்றைய ஆட்டத்தில் இஷாங்க் ஜக்கிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.

மேலும் நியூஸிலாந்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான காலின் கிராண்ட்ஹோமும் எதிர்பார்த்த அளவுக்கு சிறந்த திறனை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவருக்கு பதிலாக வங்கதேச ஆல்ரவுண்டரான ஷாகிப் அல்-ஹசன் களமிறக்கப்படக்கூடும்.

புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.

ரூ.14.5 கோடிக்கு ஏலம் எடுக்கப் பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டரான பென் ஸ்டோக்ஸ், குஜராத் அணிக்கு எதிராக 63 பந்துகளில் சதம் விளாசி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு 3 வாரங்களே உள்ள நிலையில் ஸ்டோக்ஸின் பார்மும் அணிக்கு கூடுதல் பலத்தை கொடுத் துள்ளது. குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனியொரு வீரராக அபார திறனை வெளிப்படுத்தி சதம் விளாசிய ஸ்டோக்ஸ், அணிக்கு வெற்றி தேடிக்கொடுத்தார்.

இந்த ஆட்டத்தில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ரஹானே 4, ஸ்மித் 4, ராகுல் திரிபாதி 6, மனோஜ் திவாரி 0 ரன்களில் வெளியேற 42 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து கடும் நெருக்கடியை சந்தித்த நிலையில் தோனியுடன் இணைந்து ஸ்டோக்ஸ் வெற்றிக் கான பாதையை சரியாக வடிவமைத்தார்.

தோனி 33 பந்துகளில் 26 ரன்களே சேர்த்த போதும் சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட் செய்தது, ஆட்டத்தை எந்த அளவுக்கு அவர் கற்றறிந்து வைத்துள்ளார் என்ப தையே உணர்த்தியது. 4-வது விக்கெட்டுக்கு அவர், ஸ்டோக் ஸூடன் இணைந்து 76 ரன்கள் சேர்த்தார். அணியின் வெற்றியில் இது முக்கிய பங்குவகித்தது. இந்த ஜோடி இன்றும் மிரட்ட தயாராக உள்ளது.

அணிகள் விவரம்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கவுதம் காம்பீர் (கேப்டன்), டிரென்ட் போல்ட், டேரன் பிராவோ, பியூஸ் சாவ்லா, நாதன் கவுல்டர் நைல், ரிஷி தவண், சயன் கோஷ், செஷல்டன் ஜேக்சன், இஷாங்க் ஜக்கி, குல்தீப் யாதவ், சுனில் நரேன், மணீஷ் பாண்டே, யூசுப் பதான், ரோவ்மான் பொவல், அங்கித் ராஜ்புத், சஞ்ஜெய் யாதவ், ஷாகிப் அல் ஹசன், ராபின் உத்தப்பா, கிறிஸ் வோக்ஸ், சூர்ய குமார் யாதவ், உமேஷ் யாதவ்.

புனே சூப்பர் ஜெயன்ட்ஸ்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), தோனி, டுபிளெஸ் ஸிஸ், ஆடம் ஸம்பா, உஸ்மான் கவாஜா, அஜிங்க்ய ரஹானே, அசோக் திண்டா, அங்குஷ் பெய்ன்ஸ், ரஜத் பாட்டியா, அங்கித் சர்மா, ஈஸ்வர் பாண்டே, ஜஸ்கரன் சிங், பாபா அபராஜித், தீபக் ஷகர், மயங்க்அகர்வால், பென் ஸ்டோக்ஸ், டேனியல் கிறிஸ்டியன், பெர்குசன், ஜெயதேவ் உனத்கட், ராகுல் ஷகர், சவுரப் குமார், மிலிந்த் தாண்டன், ராகுல்திரிபாதி, மனோஜ் திவாரி, ஷர்துல் தாக்குர், இம்ரன் தகிர்.

இடம்: கொல்கத்தா

நேரம்: இரவு 8

நேரடி ஒளிபரப்பு: சோனி சிக்ஸ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.