Latest News
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 18 காசுகள் உயர்வு, டீசல் விலையும் உயர்ந்ததுநிலக்கரி தட்டுப்பாடு எதிரொலி: தமிழகத்தில் மின்தடையை போக்க கைகொடுக்கும் காற்றாலைகள்எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார் எம்.எல்.ஏ. கருணாஸ்ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடிரபேல் விமான பேரம் : ரிலையன்ஸ் நிறுவனம் கூட்டாளியாக தேர்வு - மத்திய அரசு விளக்கம்பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் - ராணுவ தளபதிநாங்கள் ஆளைக் கொல்லும் புலிகள் அல்ல : சுப்ரீம் கோர்ட்டு கருத்துசென்னையில் இன்று பெட்ரோல் விலை 11 காசுகள் உயர்வு, டீசல் விலையில் மாற்றமில்லைதமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்தவர்கள் திமுகவினர் தமிழிசை சவுந்திரராஜன் குற்றச்சாட்டு

சுவையான செஃப் சமையல்! – புதினா வெள்ளரி சூப்

0

இட்லியை மஞ்சூரியானாக மாற்றுவது, தோசையில் காய்கறிகளைச் சேர்ப்பது என்று என்னதான் புதுச் சுவையோடு சமைத்துக் கொடுத்தாலும் அலுத்துக்கொள்கிறவர்களும் இருக்கிறார்கள். “அப்பாக்களும் அம்மாக்களும் புதுசு புதுசா ஏதாவது செய்து பிள்ளைகளை அசத்தணும். பள்ளி முடிந்து பசியோடு வீடு திரும்பும் குழந்தைகளுக்குப் புத்துணர்வு தரவும் திருப்தியா சாப்பிடவும் வகை வகையா சமைக்க வேண்டாமா?” என்று கேட்கிறார் தஞ்சாவூர் லட்சுமி ஹோட்டலைச் சேர்ந்த செஃப் காவிரிநாடன். புது வகை உணவுக்கு எங்கே செல்வது என்று பெற்றோரைக் குழம்ப வைக்காமல் அவரே சில எளிய சமையல் குறிப்புகளையும் தருகிறார். தினம் ஒன்றாகச் செய்து அசத்துங்கள்!

புதினா வெள்ளரி சூப்

என்னென்ன தேவை?

புதினா – ஒரு கைப்பிடியளவு

சிறிய வெள்ளரிக்காய் – 2

முலாம் பழம் – 1 கப் (தோல் சீவி, விதை நீக்கி, நறுக்கியது)

எலுமிச்சை சாறு – 1 டீஸ்பூன்

மிளகுத் தூள் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

ஐஸ் கட்டி – ஒரு கப்

கொத்தமல்லி – சிறிதளவு (பொடியாக நறுக்கியது)

எப்படிச் செய்வது?

புதினா, வெள்ளரிக்காய், முலாம் பழம், மிளகுத் தூள், உப்பு, ஐஸ் கட்டி அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். இதை வடிகட்டி அதனுடன் கெட்டித் தயிர், எலுமிச்சைச் சாறு கலந்து, மேலே கொத்தமல்லித் தழை தூவிப் பரிமாறுங்கள். குடித்ததுமே புத்துணர்ச்சி தரும் குளிர்ந்த சூப் இது.

About Author

Leave A Reply

முக்கிய குறிப்பு: வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு வேர்ல்ட் பப்ளிக் நியூஸ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு editor@worldpublicnews.com என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.