ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சகாப்தத்தின் அடையாளம்: ரஷ்ய அதிபர் புதின்
கியூபாவின் முன்னாள் அதிபரும், புரட்சியாளருமான ஃபிடல் காஸ்ட்ரோ ஒரு சகாப்தத்தின் அடையாளம் என புதின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
மறைந்த கியூப தலைவர் ஃபிடல் காஸ்ட்ரோவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் ரஷ்ய அதிபர் புதின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது, “மறைந்த ஃபிடல் காஸ்ட்ரோ நவீன உலகத்தின் சகாப்தம். ரஷ்யாவிற்கு நேர்மையான, நம்பகத்தன்மையுள்ள நண்பராக விளங்கியர் காஸ்ட்ரோ. எதிர்காலத்தை எப்போது நம்பிக்கையுடன் பார்க்கும் மனவுறுதி கொண்டவர் காஸ்ட்ரோ.
ஃபிடல் கஸ்ட்ரோ தனது வாழ்க்கையை உயர்ந்த கொள்கைகளுக்காக அர்ப்பணித்தவர். காஸ்ட்ரோவின் நினைவு எப்போதும் ரஷ்ய மக்களின் உள்ளங்களில் நிலைபெற்றிருக்கும்” என்று கூறியுள்ளார்.