குவைத்தில் மீண்டும் உங்களுக்காக “கடிதம் எழுதும் போட்டி”
கடிதம் (Letters) எனப்படுவது இருவருக்கிடையே இடம்பெறும் எழுத்து தகவல் பரிமாற்றத்தைக் குறிக்கின்றது. தமிழில் இதை அஞ்சல் என்றும் கூறுவர். தொடக்கத்தில் காகித வழி நேரடி பரிமாற்றமாக இருந்த இந்தத் தொடர்பு, இணையம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் இணையம் ஊடாக மின்னஞ்சல் ஆகவும் வடிவெடுத்தது.
இஸ்லாமிய வரலாற்றில் கடிதம் என்பது முக்கிய இடத்தை வகிக்கின்றது. திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்வியல் பக்கங்களும், இஸ்லாமிய வரலாற்று ஆவணங்களும் கடிதம் குறித்த பல்வேறு முக்கிய செய்திகளை உலக மக்களுக்கு வழங்கியிருக்கின்றன.
கடிதம் எழுதுதல் என்கிற ஒரு பயன்பாடு, மொழியின் வளர்வு நிலைக்கும், உணர்வுகளின் வெளிப்பாடுகளுக்கும் ஒரு சரியான ஊடகமாக இருக்கிறது, தொலைவில் இருக்கும் உறவுகளும், நட்புகளும் தொடர்பு கொள்ள இருந்த ஒரு மிகச் சரியான வழியாக இருந்து வந்த கடிதம் எழுதும் பழக்கம், தமிழ் மொழியியல் வரலாற்றில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறதா என்கிற ஒரு கேள்வி எழுகிறது, தமிழ் மொழி வரலாற்றில் கடித இலக்கியம் என்கிற ஒரு தொடர்பு ஊடகம் பல்வேறு சூழல்களைக் கடந்து அரசியல் இயக்கங்கள் வரை தனது பங்களிப்பை செய்து இருக்கிறது, தந்தை பெரியார் முதல் கலைஞர் கருணாநிதி வரையில் கடிதங்கள் மூலம் தங்கள் பல்வேறு துறைகளில் கோலோச்சி இருக்கிறார்கள்.
கடிதம் எழுதுவதில் இருக்கும் ஒரு உணர்வு ரீதியிலான தொடர்பு நிலை, வேறு எந்த ஒரு தொழில் நுட்பக் கருவிக்கும் இல்லாத ஒரு சிறப்பு நிலையாகும், நமது கருத்துகளையும், உணர்வுகளையும் சரியான ஒரு திசையில் கொண்டு செல்வதற்கு கடிதம் சரியான தீர்வுகளைக் கொடுக்கும், மேலும், மொழி மேலாண்மைக்கும், இன்றைய இளைஞர்களின் இலக்கிய, இலக்கண அறிவு வளர்வுக்கும் கடிதம் எழுதும் முறை சிறப்பான ஒரு தீர்வாகும்.
கடிதம் எழுதும் ஒரு கலையை நமது இளையோர் மட்டுமின்றி, வேறுபாடின்றி அனைவரும் தொடர்ந்து நமது பண்பாட்டு அடையாளமாக இருக்கும் கடிதம் என்கிற ஒரு மொழியியல் ஊடக வளர்வுக்கு நம்மால் இயன்ற பணிகளைச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic), இன்ஷா அல்லாஹ்… டிஸம்பர் (2016) 2ந் தேதி சங்கத்தின் 12ம் ஆண்டு ஸீரத்துன் நபி (ஸல்) பெருவிழாவை முன்னிட்டு சிறப்பு போட்டியாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு இரண்டாவது முறையாக மீண்டும் “கடிதம் எழுதும் போட்டி”யை குவைத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
நாள்: 02/12/2016 வெள்ளிக்கிழமை
நேரம்: நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையைத் தொடர்ந்து…
இடம்: K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசல், ஃகைத்தான், குவைத்.
இந்த அரிய வாய்ப்பை குவைத் வாழ் தமிழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
—————————— —————————— —————————— ——
தகவல் தொடர்பு & ஊடகப் பிரிவு,
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic),
குவைத்.