Breaking News

ஜெயலலிதாவை அடக்கம் செய்த இடத்தில், கருணாஸ், எம்.எல்.ஏ., சிரித்தபடி, செல்பிக்கு போஸ் கொடுத்தது, சமூக வலைதளங்களில், கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் முடிந்ததும், எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர். திருவாடானை, எம்.எல்.ஏ.,வான, நடிகர் கருணாஸ் சென்றபோது, அவரை சூழ்ந்த ரசிகர் ஒருவர், செல்பி எடுத்தார். தான் ஆளுங்கட்சி, எம்.எல்.ஏ., என்பதை மறந்து, சிரிப்புடன், போஸ் கொடுத்தார். அந்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதை பார்த்தோர், தமிழகமே சோகத்தில் மூழ்கி, ஜெ., நல்லடக்கத்தை பார்த்திருக்க, அவரால், எம்.எல்.ஏ.,வான கருணாஸ், சிரித்தபடி போஸ் கொடுத்தது கண்டனத்திற்குரியது என, கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
karunas
இது குறித்து, கருணாஸ் கூறியதாவது: ராஜாஜி அரங்கிலும், எம்.ஜி.ஆர்., நினைவிடம் செல்லும் வழியிலும் பலர், செல்பி எடுக்க முயன்றனர்; அவர்களை திட்டி அனுப்பினேன். ஒருவர், ஊரிலிருந்து வந்திருப்பதாக கூறி, கெஞ்சியதால், அவருடன் போட்டோ எடுத்தேன். இது போன்ற இடங்களில், எப்படி நடக்க வேண்டும் என்ற உணர்வு, மக்களிடம் இல்லை.அம்மாவிடம் நான் வைத்திருந்த விசுவாசம், அவருக்கு தெரியும். அவரை நல்லடக்கம் செய்த இடத்தில் விழுந்து கும்பிட்டு, ஒரு பிடி மண்ணை அள்ளி வந்து வீட்டில் வைத்திருக்கிறேன். யார் விமர்சனமும் என்னை ஒன்றும் செய்யாது. இவ்வாறு அவர் கூறினார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.